நிவாரணம் தருவது எது?
நவம்பர் 08,2010,
19:11  IST
எழுத்தின் அளவு:

* இறைஞ்சுதல் வந்துவிட்ட
சோதனைகளுக்கும், வரப்போகும் சோதனைகளுக்கும் நிவாரணம்
நல்குவதாக உள்ளது. இறைஞ்சுதல்
விதியையும் மாற்றிவிடும். எனவே இறைஞ்சுவதை நீங்கள் உங்களுடைய இன்றியமையாப் பண்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
* உங்கள் இறைஞ்சுதல் ஒப்புக் கொள்ளப்பட்டு விடும் என்று நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவனிடம் இறைஞ்சுங்கள். மேலும், திண்ணமாக மன ஓர்மையற்று மாசு மனத்துடன் இறைஞ்சும் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
* ஒரு மனிதர் வினவினார். ""இறைத்தூதரே! நான்
ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு இறைவனின் மீது
நம்பிக்கை வைப்பதா? அல்லது அதனை (கட்டாமல்) அப்படியே அவிழ்த்துவிட்டு விட்டு இறைவனின் மீது நம்பிக்கை வைப்பதா? அதற்கு இறைத்தூதர்""அதனை நீர் கட்டி வைத்துவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வையும்,'' என்று கூறினார்.
* இறைவா! உனக்கு நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு
நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறி
தவறிப்போகாதவர்களின் வழி.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து) 


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement