இழிநிலைக்கு காரணம் சுயநலம்
ஜனவரி 06,2008,
21:39  IST
எழுத்தின் அளவு:

சேவை புரியாமலேயே உயர்நிலை அடைய வேண்டுமென ஆசைப்படுபவர்கள், அப்படிப்பட்ட நிலையை எட்ட முடியாது.

உயர்வு தாழ்வு என்னும் தப்பான எண்ணத்தைக் கற்பிதஞ் செய்து கொள்ளும் பொழுதுதான், சமுதாயத்தில் சிக்கல்கள் எழுகின்றன.

இந்தியாவிலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று நிலவுகின்ற இழிநிலைக்கான காரணம் மனிதர்களின் பேராசை, சுயநலம், வரட்டுக் கவுரவம், அகங்காரம் போன்ற விரும்பத்தகாத பண்புகளேயாகும்.

மக்களின் பொதுவான இயற்கைத் தேவைகளையும், விருப்புகளையும் புரிந்து கொள்ளாமல், எப்பொழுதும் கடும் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மட்டுமே வலியுறுத்துகின்ற சமயம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது.

மாணவர்கள் தமது விதியையும், தேசத்தின் தலைவிதியையும் உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும். இது அவர்களுக்குரிய மாபெரும் பொறுப்பாகும்.

உங்களுக்குரிய வாழ்க்கையை அமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னேறுவதற்குப் பிறரை நம்பியிருக்காதீர்கள். பொறுப்புகளை ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுங்கள்.

தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. தோற்றுவிடுவோமோ என அஞ்சினால் உன்னால் ஒருபோதும் எதனையுமே சாதிக்க முடியாது.

பிரச்னைகளைக் கண்டு மலைக்காமல், அவற்றைத் துணிவாக எதிர்கொள்ளுங்கள்.அவற்றிலிருந்து தப்புவதற்காக ஒழிந்து கொள்ள முயன்றால் மேலும் பல சிக்கல்களே உருவாகும்.

Advertisement
தேஜோமயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement