சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!
நவம்பர் 16,2010,
05:11  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் அனைவரையும் ஒன்று
போல் தான் நேசிக்கிறான். ஆனால்
பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை
அவர்களால் உணர முடிவதில்லை.
* அன்பு மனிதர்களிடம் மட்டும்
வெளிப்படுவதில்லை. அது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தாவரங்கள், கற்கள்,
விலங்குகளிடமும் இருப்பதை காணலாம்.
* இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும்,
சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்டால் அதை மீண்டும் பெற ஒரு வேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
* ஒவ்வொரு இரவிலும் தூங்க செல்வதற்கு முன் அன்று முழுவதும் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* என்ன நடந்தாலும், நாம் அமைதியாகவும், இறைவன் அருளில் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
* இறைவனின் சொற்கள் பேரின்பத்தையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக்
கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கும்
ஒவ்வொரு திரையையும் விலக்குகின்றன.
-ஸ்ரீஅன்னை 

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement