E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உடலுக்கு நலன்தரும் செயல்
நவம்பர் 16,2010,
05:11  IST
எழுத்தின் அளவு:

* எங்கள் இறைவனே ! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது
சுமத்திவிடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்!
* எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும்
எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக!
* என் இறைவனே! சிறு வயதில் எவ்வாறு என்னை என் பெற்றோர் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே அவர்கள் மீது கருணை புரிவாயாக!
* உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை
நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக,
(வயிற்றை நிரப்புவது) உடலுக்கு கேடு விளைவிக்கும்; நோயை உண்டாக்கும்; தொழுகையில் சோம்பலை
ஏற்படுத்தும். எனவே, இவ்விரண்டிலும்
(உண்ணுவதிலும், பருகுவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும்; செலவைக் குறைக்கும்.
* மனிதனுக்கு அவனுடைய வயிற்றைவிட மிகக் கெட்ட பாத்திரம் வேறொன்றுமில்லை. எனவே அவனை நிலை நிறுத்த சில கவளங்களே போதுமானவையாகும்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
 


குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement