பெண்களிடம் பக்தி செலுத்துங்கள்
நவம்பர் 16,2010,
05:11  IST
எழுத்தின் அளவு:

* ஒரு நல்ல செயல் செய்யத் துவங்கும் முன் அதை ஆண்டுக்கணக்கில் நீட்டிக் கொண்டு செல்வதால், மற்றவர்களுக்கு அது தீராத தொல்லையாகும்படி செய்யக்கூடாது.
* மகான்கள், கவிகள், சாஸ்திரக்காரர்கள்
மற்றும் நாட்டுக்கு நல்லது
செய்தவர்களுடைய பிறந்த தினங்களை கூட்டம் நடத்தி கொண்டாடுவதுடன் ஆராய்ச்சிகள்
செய்வதும் அவசியம்.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க
வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும்.
* இந்துமதம் துறவறத்தை ஆதரிப்பதில்லை, மாறாக
உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தேவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டது.
* பெண்கள் தாம் விரும்புபவரைத் திருணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையல்ல. உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; உயிரிலே ஒரு பகுதியாகும்.
* பெண் விடுதலைக்காக தர்மயுத்தம் துவங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம், இதற்கு பராசக்தி துணைபுரிவாள்.
-பாரதியார்


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement