தீயதை நல்லதென கருதாதே
ஜனவரி 06,2008,
21:49  IST
எழுத்தின் அளவு:

* மனம் கற்பனைகட்கும் புத்தி மாறாட்டங்களுக்கும் உட்பட்டது. வெளிச்சக் குறைவில் கயிற்றைப் பாம்பென நினைத்துப் பயப்படுகிறாய். விளக்கு வந்ததும் பாம்பு அல்ல என்று கண்டு கொள்கிறாய். அங்கு எப்போதும் கயிறே இருந்தது. ஆனால், மனிதனின் கற்பனையில் பாம்பு என்ற சிந்தனை ஏற்பட்டது.

* கண்ணாடியை உன் எதிரே பிடிக்கும்போது அதில் உன் உருவம் பிரதிபலிக்கிறது. உருவம் கண்ணாடியுள் இருப்பதல்ல. கண்ணாடியின் பின்னே பூசப்பட்ட பாதரசத்தால் பிரதிபலிப்பைக் காண்கிறோம். அது உங்கள் உண்மையான பிரதிபலிப்பு என்று நம்புகிறீர்கள். அதுபோலவே, இயற்கை என்ற மிகப் பெரும் கண்ணாடியில் காணும் பலதிறப்பட்ட பொருட்களை உண்மையென மதிக்கிறீர்கள். அவையாவுமே தெய்வீகத்தின் வேறுபட்ட வடிவங்கள்.

* நஞ்சை கரும்புச் சாறு என்று நினைத்து தவறுதலாக குடித்தால் ஆபத்தானதுதான். எனவே தீய ஒன்றை நல்லதென்று செய்தாலும் விளைவு தீயதாகவே இருக்கும்.

* இந்த உலகம் கடவுள் படைத்த மிகப்பெரிய காட்சிக்கூடம். இதில் அனைவரும் உள்ளே வருகின்றனர். விரும்பியதைப் பற்றிப் பேசுகின்றனர். சிலருக்கு வேலை வேண்டும். சிலருக்குச் செல்வம் வேண்டும். ஆனால், தெய்வீகத்தை விரும்புபவருக்கு பிரபஞ்சமே அவர்களுடையதாகிறது.

* மனிதனுக்காக கடவுள் பிரபஞ்சத்தில் அனைத்தையும் படைத்தான். தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு உயிருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. விரும்புவதை அனுபவிக்க முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர்பான மறு விளைவு உண்டு.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement