E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அன்பு தான் வாழ்க்கை
டிசம்பர் 08,2010,
01:12  IST
எழுத்தின் அளவு:

* உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன்  என்னும் கருணைக்கடலில் மூழ்கி
எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
* நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து,
ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.
* "சமயம்' என்ற பெரிய கறவை மாடு பல முறை  உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.
"முடியாது' என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்.
- விவேகானந்தர் 

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement