எச்சரிக்கையாகப் பேசுங்கள்!
டிசம்பர் 15,2010,
19:12  IST
எழுத்தின் அளவு:

* நம்பிக்கையிருந்தால் அன்பிருக்கும்,  அன்பிருந்தால் அமைதியிருக்கும்,
அமைதியிருந்தால் உண்மையிருக்கும், உண்மையிருந்தால் உள மகிழ்ச்சியிருக்கும், உள மகிழ்ச்சியிருந்தால் கடவுள் இருப்பார்.
* தாயிடம் அன்பு காட்டுவதுடன், தாய், தந்தை, குரு, விருந்தினரை கடவுளாக மதிக்க வேண்டும். இந்த நால்வருள் தாய் முதன்மையானவள்.
* அன்பை வளர்த்துக்கொள்; அன்பைப் பரப்பு; அன்பை அறுவடை செய்து கொள், அன்பை விட மேலான மதம் ஏதுமில்லை.
* தீய செயல்கள் நன்மை பயக்காது, நல்ல செயல்கள் தீமை விளைவிக்காது, வேப்ப விதையில் மாவிளையாது,
மாங்கொட்டையில் வேம்பு விளையாது.
* பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மிருகங்களுக்கு கொம்புகள், பூச்சிகளுக்கு கொடுக்குகள், விலங்குகளுக்கு நகங்கள், நச்சுப்பற்கள் உள்ளன.  மனிதனுக்குத் தாக்கும் ஆயுதம் நாக்கு. நாக்கினால்  ஏற்பட்ட காயம் ஆற நீண்ட நாள் ஆகும்.
* நல்லது செய்தவனுக்கு நல்லது செய்வதில்லை மனிதனுக்கு பெருமை இல்லை. தீமை செய்தவனுக்கும் கூட நன்மை செய்வதில் தான் பெருமை உள்ளது.
- சாய்பாபா
 


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement