கீதை காட்டும் வழி
டிசம்பர் 15,2010,
19:12  IST
எழுத்தின் அளவு:

* எதிர்பார்க்க முடியாத நற்பயனும், அதனை உலகத்தார் கண்டு வியக்கும் விதமாக  ஒருவனுக்குக் கைகூட வேண்டுமானால் அதற்கு பக்தி தேவை.
* நம்பிக்கையே காமதேனு, அதுகேட்ட வரத்தை அளிக்கும். சந்தேகம் உள்ளவன் அழிவான், நம்பிக்கை கொண்டவன்
மோட்சமடைவான்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றியும் தத்தளிக்கிறது.
* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட்டு,  என்றும் மாறாத பேரின்பத்தை பெற விரும்புகிறான். அதற்குரிய வழியை கீதை காட்டுகிறது.
* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி  கணவனை நம்புவது போலவும்,  தான் தன்னை நம்புவது  போலவும் தெய்வத்தை நம்புவதே பக்தி.
* தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் செயல்  பாவமாகும். தனக்கும், பிறர்க்கும் இன்பம்
விளைவிக்கும் செயல் புண்ணியச் செயலாகும்.
* நாம் ஊக்கத்துடன் செயல்பட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டுகிறது.
- பாரதியார் 


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement