உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி
ஜனவரி 07,2008,
22:08  IST
எழுத்தின் அளவு:

உன்னுடைய மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றும் திடநம்பிக்கையும் உடையவனாய் இரு. ஆனால், மதவெறியின்றி, பிற மதத்தின் மீது துவேஷம் அற்றவனாயிரு.

உன்மத்தர்கள், குடிகாரர்கள், குழந்தைகள் இவர்கள் வாய் மூலமாகவும் சிற்சில வேளைகளில் தெய்வீக விஷயங்கள் வெளிவருவதுண்டு.

பக்தியையும் பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினந்தோறும் உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக்கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.

'ஹரி' என்றால் நமது இதயத்தைக் கவர்பவன் என்று பொருள்.

ஈசுவர தியானத்தில் மிதமிஞ்சிப் போவதால் துன்பமடைவது இல்லை. வைரத்தினுடைய ஜோதி பிரகாசித்துக் குளிர்ச்சியைத் தருமே ஒழிய ஒருபோதும் சுட்டெரிக்காது.

புண்ணிய பாவத்தின் உயர்வு தாழ்வு என்பது மனத்தின் நிலையைப் பொறுத்து அமைவதாகும்.

மானுட உடல் ஒரு தலையணை உறைபோன்றது. அதனுள் பஞ்சு போன்ற எதை வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். ஆனால் பக்தன் ஒருவனுடைய உள்ளமோ ஈசனுடைய ஆலயம் ஆகிறது.

கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருப்பவைகளை எல்லாம் கண்ணாடியின் மூலமாகப் பார்ப்பது போன்று, ஒருவனுடைய கண்ணின் மூலம் அவன் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் காணலாம்.

மனிதனுக்கு எட்டுவித பந்தங்கள் இருக்கின்றன. அதை வெட்கம், வெறுப்பு, அச்சம், ஜாதிச்செருக்கு, வம்சவழிச் செருக்கு, சீலம், துயரம், உள்ளத்தில் ஒளித்து வைத்தல் என்பனவாகும். குரு கடாட்சமின்றி இப்பந்தங்களினின்று சாதகன் ஒருவன் விடுதலை அடைவதில்லை.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement