அனைவரும் சகோதரர்களே!
ஜனவரி 17,2008,
01:24  IST
எழுத்தின் அளவு:

* உங்கள் முன்பாக யாராவது கஷ்டப்பட்டால், அவர்களது நிலையைக் கண்டு வெறுமனே பரிதாபப்பட்டு மட்டும் சென்றுவிடாதீர்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றி வையுங்கள். அதையும் அன்புடன் செய்யுங்கள். அவர்களுக்குசிறு தீமைகூட வந்துவிடாத அளவிற்கு பாதுகாப்பு கொடுங்கள். அவர்களது மனம் நோகும்படியான வார்த்தைகளை பேசாதீர்கள். மென்மையாகவும், இனிமையாகவும் பேசுங்கள். ஆதரவற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும் நீங்கள் செய்யும் சிறிய உதவிகூட இறைவனின் கணக்கில் மிகப்பெரிய பலனாக கருதப்படும். அதற்காக அந்த பலனை எதிர்பார்க்காமல், பிறர்க்கு உதவுவதை உங்கள் கடமையென நினைத்து உதவுங்கள்.

* உலகில் வாழும் அனைவரும் இறைவனை தந்தையாக ஏற்றுக்கொண்டு, சகோதர, சகோதரிகளாக வாழுங்கள். சகோதர பாசத்துடன் பழகுங்கள். அவர்களுக்கு, நீங்கள் வைத்திருக்கும் பொருளில் பங்கு கொடுக்கத் தேவையில்லை. ஆனால்,  அன்பை மட்டும் தவறாமல் செலுத்துங்கள். ஏனெனில், கருணை பொழியும் குணம்கொண்ட இறைவன், அன்பின் வடிவமாகவே இருக்கிறார். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, இறைவன் உங்களிடம் அதைவிட பல மடங்கு அதிகமான அன்பு செலுத்துகிறார்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement