இறைவனால் நேசிக்கப்படுபவை
டிசம்பர் 31,2010,
07:12  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் மென்மையானவன். அவன் எல்லாவற்றிலும் மென்மையையே விரும்புகிறான்.
* உன்னிடம் இரண்டு பண்புகளை
இறைவன் மிகவும் நேசிக்கிறான், 1.மென்மை, 2.சகிப்புத்தன்மை.
* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி
உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ, பாதகமாக இருந்தாலும் சரியே...
எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக்கூடாது.
* தனிமனிதனின் (தவறான) செயலுக்காக இறைவன் அனைவரையும் தண்டிப்பதில்லை. ஆனால் தீமைகளைக் கண்டும், அதனைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் அதனைத் தடுக்காதிருந்தால் இறைவன் அனைவரையும் (தீமைகளைப் புரிந்தவர், தடுக்காதிருந்தவர்)
தண்டிப்பான்.
* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள்
செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.
* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப்
பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே
உண்மையான செல்வமாகும்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement