வெற்றி மட்டுமே நமக்கு!
டிசம்பர் 31,2010,
07:12  IST
எழுத்தின் அளவு:

புத்தாண்டில், மீசைக்கவிஞர் பாரதியார் கூறும் அறிவுரைகளை மனதில் கொள்வோமா!
* ""நாழிகைகள் கடந்தன. நாட்கள் நகர்ந்தன, பருவங்கள் மாறின. ஆண்டுகள் சென்றன. நான் மட்டும் மாறுபடமாட்டேன். நான்
எக்காலமும் உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த மனம்
ஆகியவற்றோடு இருப்பேன்,'' என்று
ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
*அன்பு நம்மை வளர்த்துக் காக்கும். பிறகு வெற்றி
மட்டுமே நமக்கு!
*உலகில் உள்ள அனைத்துவிதமான இன்பங்களும் நமக்கு தேவை. அவற்றை பெறுவதற்கான அறிவுத்
திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கலாம்.
* உடம்பை வைரம்போல் உறுதி உடையதாகவும்,
பறவைகளைப்போல லாகவமுடையதாகவும்,
சிங்கத்தைப்போல வலிமையுடையதாகவும் செய்ய வேண்டும்.
* நமக்கு தேவை நீண்ட ஆயுள், ஆரோக்கியமான உடல்நிலை, அறிவு, செல்வம். இவற்றை உங்கள் இஷ்ட
தெய்வத்திடம் கேட்டுப் பெறுங்கள்.


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement