நமக்குத் தேவையான மூன்று
டிசம்பர் 31,2010,
07:12  IST
எழுத்தின் அளவு:

*உன் உடலில் ஏற்பட்டுள்ள கறையைப் பற்றிக் கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்தால், அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
*உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை.
*நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். அதனால், புனிதமும் பூரணத்துவமும் உங்களிடம் நிறைந்திருக்கிறது.
* அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.
* ஒட்டகம் முள் செடியைச் சாப்பிடும் போது வாயிலிருந்து ரத்தம் சொட்டும், இருந்தாலும் தின்பதை
நிறுத்துவதில்லை. அதுபோல உலகத்தார் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானாலும் உலகப்பற்றை அவர்கள் விடுவதில்லை.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.
-விவேகானந்தர்


Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement