பிறருக்கு கேடு நினைக்காதே
ஜனவரி 18,2008,
22:57  IST
எழுத்தின் அளவு:

* ஓம் என்ற பிரணவத்திற்கு 'உத்கீதா' என்று ஒரு பெயருண்டு. 'உத்' என்றால் 'பிராண சக்தி'. 'கீ' என்றால் 'வாக்கு'. 'தா' என்றால் 'உணவு'. ஆகவே இந்த 'ஓம்' என்பது ஆத்மா, மனது, சரீரம் மூன்றிலும் இழையோடும் தத்துவமே. இதுவே 'பிரக்ஞா' எனப்படும்.

* அகங்காரமும் ஆடம்பரமுமே மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள் என்பதை ஒவ்வொருவரும் நன்றாக உணர வேண்டும்.

* மனிதன் எவ்விதமான பணியில் ஈடுபட்டிருப்பினும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆதி காரணமான மெய்ப்பொருள் மீது நாட்டத்தை விட்டுவிடக்கூடாது.

* உலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று கோருவதுடன், பிறர் நலனுக்காகப் பாடுபடுவதிலும் ஊக்கம் கொள்ள வேண்டும்.

* கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கேற்ப, பிறருக்குத் தீங்கு விளைவிக்க எண்ணம் கொண்டால் நமக்கே தீங்கு விளையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

* நல்லதையே நினைத்து, நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவர்களாகத் திகழுங்கள். இதுவே பிரும்மத்துவத்தின் ரகசியம். பக்தியின் லட்சணமும் இதுவே. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருத்தல் மனிதத் தன்மையின் சிறப்பாகும்.

* எவ்வித வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல் அடிப்படை ஒற்றுமையான ஒவ்வொருவரிடமும் உள்ள தெய்வத்துவத்தையே போற்ற வேண்டும். இதுவே உண்மையான மனிதத் தன்மையாகும்.

* மனிதன் தனது உடலுறுப்புக்களின் உதவியுடன் நற்பணிகள் செய்து சீரான முறையில் கழிப்பதுதான் அவனது தலையாய கடமையாகும். இப்பூத உலகில் செய்யும் பணிகளாலேயே மனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement