முதலில் உன்னைத்திருத்து!
டிசம்பர் 03,2007,
06:28  IST
எழுத்தின் அளவு:


* நீருக்கு மீன் அவசியமில்லை. ஆனால், மீனுக்கு நீர் அவசியம். அதுபோல குருவுக்கு சீடன் அவசியமில்லை. ஆனால், சீடனுக்கோ குரு மிகவும் முக்கியம். குருவின் துணையில்லாவிட்டால் சீடனால் எதுவும் செய்ய முடியாது.


* முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டை திருத்த வேண்டும். அதன் பிறகே, நமது ஊரை திருத்த வேண்டும். அடுத்து மாவட்டத்தையும், பின்னர் மாநிலத்தையும், அதற்கடுத்தபடியாக நாட்டையும் திருத்த முயல வேண்டும். இவ்வாறு படிப்படியாகத்தான் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, எடுத்த எடுப்பிலேயே சமுதாயத்தையும் நாட்டையும் திருத்த முயல்வது அர்த்தமற்றது.


* நீரும் நீரும் எளிதில் ஒன்றாக கலந்து விடும். ஆனால், நீரில் எண்ணையை விட்டால் அது கலக்காமல் பிரிந்தே நிற்கும். அதே போல் நல்லவர்கள் நல்லவர்களுடன் எளிதில் சேர்ந்து விடுவார்கள். ஆனால், கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, அவர்களுடன் சேர முயற்சித்தாலும் அது முடியாமல் போய்விடும்.


* குளத்தில் நீர் இருந்தால் தவளைகள் அங்கே குவிந்திருக்கும். நீர் வற்றி விட்டால் அங்கிருந்து வெளியேறிவிடும். அதே போல் ஒருவனிடம் பதவி, பணம் இருக்கும் போது மக்கள் அவனை சூழ்ந்து இருக்கின்றனர். ஆனால், அவனுக்கு வறுமை ஏற்படும் போது, உறவினர்களும், உயிர் நண்பர்களும் விலகி விடுகின்றனர்.


* வளர்த்த பெற்றவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல், படைத்த இறைவனுக்கும் தினமும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement