மனப்படகே! மூழ்கி விடாதே!
ஏப்ரல் 03,2008,
22:35  IST
எழுத்தின் அளவு:

* எல்லாருடைய வாழ்விலும் நிச்சயமாக துயரமும், வேதனையும் இருக்கிறது. முதுமையின் வேதனை, நோயின் பிடிப்பு, பிரியமானவரை இழப்பது போன்றவை இவை. நாம் செய்த முன்வினைப்பயனாக இவை நமக்கு அமைகின்றன. நல்ல செயல்கள் நன்மையையும், தீயசெயல்கள் தீமையையும் தரும். இதை உணர்ந்து நமது இன்றைய செயல்களை திருத்திக் கொண்டால் வேதனைகளைக் குறைக்கலாம்.* காரில் பயணம் செய்யும் போது, நாம் போக வேண்டிய இடத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு, நாம் கவலையில்லாமல் பயணத்தை மேற்கொள்கிறோம். நிச்சயம் நம்மை போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் என நம்புகிறோம். அதுபோல, நம்மை விட மேலான மகான்களிடம் உங்களை நம்பி ஒப்படையுங்கள். அந்த நம்பிக்கையே நிச்சயம் உங்களை கரைசேர்க்கும்.
* மனம் படகு போன்றது. அதன் உதவியால், கடல் போன்ற வாழ்வில் லாவகமாக மகிழ்ச்சியுடன் பயணம் செய்யலாம். கடல்மீது செல்வதற்கு படகு பயன்படுவது போல், வாழ்க்கையைச் செலுத்த உதவும் கருவியாக மனதை நினைக்க வேண்டும். கடல் நீர் படகுக்குள் சென்றால் படகு மூழ்கிவிடும். அதுபோல், மனம் தேவையற்ற விஷயங்களில் மூழ்கினாலும், அமிழ்ந்து போகும். எனவே மனதை கெட்ட விஷயங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது.


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement