மன காகிதத்தை சுருட்டுங்கள்
ஜனவரி 12,2011,
19:01  IST
எழுத்தின் அளவு:

* தெய்வீக இயல்பு கொண்டுள்ளதால்
மனிதன் உயிர்வாழ எப்போதும் தன்னைச் சுற்றிலும் தெய்வீக மணம் கமழ
வாழ வேண்டும்.
* மனித நலனுக்காக உலகைப் படைத்தவர் இறைவன். மனிதன் தன் முனைப்பு
காரணமாக அழிவுக்கான ஏவுகணைகளைப் படைத்திருக்கிறான். இன்று பலர் கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையால் பெறும் பலத்தைவிட, தம் உடல்,
மன பலத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
* கடவுள் அன்பு மலை போன்றவர். எத்தனை எறும்புகள் எவ்வளவு இனிப்புத் துகள்களை எடுத்துச் சென்றாலும் அவரிடம் அன்பு குறையாது. கடவுள் கட்டுப்படுத்தும் கரையற்ற கருணைக்கடல், அவர் கருணையைப்
பெறவும், அவர் அனைத்திடங்களிலும், அனைத்துப் பொருட்களிலும் நிலை பெற்றுள்ளதையும் அறிந்து கொள்ள மிக எளிமையான வழி பக்தியாகும்.
* மனம் காகிதம் போன்றது. அதை ஒரு பக்கமாகச் சுற்றிவைத்தால் அதே பக்கமாகவே மறுபடி சுருளும். அதைச் சமப்படுத்த மறுபக்கமாகச் சுருட்ட வேண்டும்.
* கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைவுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறினால் உலகில்
நீங்கள் எளிதாக இயங்க முடியாது.
-சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement