இறைவனையே சார்ந்திருங்கள்
ஜனவரி 12,2011,
19:01  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் நன்கறிபவனாகவும்,
நுண்ணறிவு மிக்கவனாகவும்
இருக்கின்றான்... படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே!
* யாரேனும் இறைவனுக்கு அஞ்சி (யவண்ணம்
செயல்படுவாரா) னால் இறைவன் அவருக்கு
(சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு) ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் இறைவனையே முழுவதும்
சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு இறைவன்
போதுமானவன்.
* இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறிய மாட்டார்.
* நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கிறான். பின்னர் மறுமுறையும் அவனே
படைக்கின்றான். ஏனெனில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!
* உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள்
வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் இறைவன் உங்களிடம் அவை
பற்றிக் கணக்கு கேட்பான்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement