உழைத்து வாழ வேண்டும்
ஜனவரி 12,2011,
19:01  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் ஒரு வயிறையும், இரண்டு
கைகளையும் கொடுத்திருக்கிறார். அவன் இரண்டு கைகளாலும் கஷ்டப்பட்டு
உழைத்தால் பட்டினி கிடக்கத் தேவைஇல்லை.
* உங்களிடம் நம்பிக்கை வையுங்கள்.
காரணம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வம் தான்.
* உன்னிடம் உள்ள முழுமையான தெய்வத்தன்மையை அலட்சியம் செய்துவிட்டு, அதை பிறரிடம் தேடுவதால் அது துன்பத்தையே ஏற்படுத்தும். ஆதரவற்றவன்,
பலகீனன், தாழ்ந்தவன் என்று உன்னை நீயே
இழிவுபடுத்திக் கொள்கிறாய். கோழைத்தனமும், தன்னைக் குற்றங்காணலும் தெய்வச் சுடரின் பொறியாகாது.
* மனிதனுக்குச் செய்யும் தொண்டு கடவுள் தொண்டைவிட மேலானது. கடவுளுக்கு உன் சேவை தேவையில்லை, மனிதனை மகிழ்ச்சிப்படுத்துபவன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துபவனாகிறான்.
* இரவில் குளிர் அதிகரிக்கும் போது கம்பளியால்
உன்னைச் சுற்றி இழுத்துக் போர்த்திக் கொள்கிறாய். அதுபோல் துன்பம் உன்னைத் தாக்கும் போது, மனதைச்
சுற்றிக் கடவுள் திருநாமம் என்னும் கதகதப்பை
அமைத்துக் கொள்ள வேண்டும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement