தேச ஒற்றுமை வேண்டும் சாய்பாபா புத்தாண்டு செய்தி
ஏப்ரல் 12,2008,
22:57  IST
எழுத்தின் அளவு:

பஞ்சாங்கத்தில் பிரபவ, விபவ, சுக்ல, ப்ரமோஎன 60 வருடங்கள் உள்ளன. இதன் சுழற்சி "அக்ஷயா' எனப்படும் அறுபதாவது வருடத்தில் நிறைவடைகிறது. இந்த உடல் இதுவரை, இரண்டு அக்ஷய வருடங்களைப் பார்த்து விட்டது. சர்வதாரி எனப்படும் இந்த வருடம் மனிதனுள் உறைந்திருக்கின்ற தெய்வீகத்தினை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. மனிதனுக்கு பலவகையான ஆசைகளும், தேடல்களும் உள்ளன. அத்தகைய ஆசைகள் நியாயமானதாக இருந்தால் சர்வதாரி எனப்படும் இந்த வருடத்தில் நிறைவேறும். ஒழுக்கம், ஆன்மிகம், நேர்மை, அறிவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க வகையினில் முன்னேற்றத்தினை இவ்வருடத்தில் காணலாம்.சத்தியமான ஆசையானது, என்றென்றும் நிச்சயமாக நிறைவேறும். என்ன நடந்தாலும் சரி...சத்தியத்தை நீங்கள் நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும். தற்சமயம் நாம், நம் சுயவிருப்பத்தினைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். புத்தாண்டில் இந்த நிலை மாறிட வேண்டும். ஒற்றுமையையும், தேசிய அளவிலான தேவைகளையும், விருப்பங்களையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தேசம் முழுவதும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து நின்றிட வேண்டும். அனைத்து மக்களும் ஒன்றுகூடி பணிபுரிந்தால், இவ்வுலகம் முழுவதும் மேம்பட்ட ஒரு இடமாக, நாம் வாழ்வதற்கு அமைந்து விடும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement