தெய்வத்திடம் கேட்க வேண்டியது
ஏப்ரல் 12,2008,
23:00  IST
எழுத்தின் அளவு:

மாறுதல் இன்றி வளர்ச்சி இல்லை. மாறுதல் என்பதே உலகின் முதலாவது விதி. மாறுதல் என்றால் இப்போதுள்ளதை அப்படியே முழுமையாக மாற்றுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. நல்ல பயனுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு, பயனற்ற அம்சங்களை மாற்றுவதே மாற்றம். முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வத்தை அப்படியே வைத்துக்கொண்டு பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வாளாகவிருப்பவன் சோம்பேறியாவான்."குன்றும் மாளும்' என்பது போல் நாளுக்கு நாள் அவன் ஏழ்மை நிலையை அடைந்து விடுவான்.நமக்கு இவ்வுலகில் வேண்டுபவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்காகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடி வழிபடுங்கள். எல்லா தெய்வங்களும் ஒன்றேயாகும். எல்லாவிதமான செல்வங்களையும் அறிவினால் பெறலாம். அறிவுடையோர் எல்லாம் உடையார். அறிவில்லாதவர்கள் எவ்வளவு செல்வ வளமிருந்த போதிலும் ஏதுமில்லாதவரே. நாம் ஒவ்வொருவரும் உடம்பை உழைப்பினாலும் பயிற்சியினாலும் சுறுசுறுப்புடன் இயங்க கற்றுக் கொள்ள வேண்டும். மனதை தீவிரமாக வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரம் உண்டாகும். அதில் சோம்பலைக் குடிகொள்ள அனுமதித்தால் நம்மிடம் முயற்சி இல்லாமல் போய்விடும். -                                                                                                                                                                          பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement