கடவுளே மேலானவர்
ஜனவரி 20,2011,
23:01  IST
எழுத்தின் அளவு:

* ""உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது, பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே,'' இது கடவுளின் வாக்கு.
* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, அனைவருக்கும், எப்போதும், நன்மை செய்ய முயற்சிக்க வேண்டும்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
* அனைவருக்கும் கடவுள் தந்தையுமானவர் ஒருவரே. அவர் அனைவருக்கும் மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும் செயலாற்றுகிறவர். அனைவருக்குள்ளும் இருக்கிறவர்.
* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
* அடிமையாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து
நன்மையே பெறுவர்.
* அறிவுத்தெளிவோடு விழிப்பாயிருங்கள்.
- பைபிள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement