கடவுளிடம் பாரபட்சம் இல்லை
ஏப்ரல் 14,2008,
01:41  IST
எழுத்தின் அளவு:

இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும்
இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரிந்த போதிலும் நாம் இன்பத் தையே நாடுகிறோம். இதற்கு முடிவு தான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி, ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தை பற்றி நினைக்கிறான்.துறவி கடவுளைப் பற்றி நினைக்கிறான். ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.-ரமணர் (இன்று ரமணர் நினைவு தினம்)

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement