ஆன்மிகக்காற்று வீசட்டும்
ஜனவரி 25,2011,
19:01  IST
எழுத்தின் அளவு:

* இறையருளின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது. தானே எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம், தான் எனும் இறுமாப்பை வெளிப்படுத்துவதாகும்.
* நாக்கு பேச்சை நிறுத்தினால், மனம் பேசத் துவங்கிவிடுகிறது. மனதின் உரையைக் கட்டுப்படுத்த அறிவு உயிர்த்தெழ வேண்டும்.
* உலகிலுள்ள அனைத்து பொருள்களும் ஏதோ பயனுள்ள ரகசியத்தை வெளியிட வைத்துள்ளது. பயனற்ற பொருள் எதையும் கடவுள் படைப்பதில்லை. அனைத்துப் பொருட்களும் பயனுள்ளவை; அர்த்தமுள்ளவை; மகிழ்வூட்டுபவை, மதிப்புள்ளவை. ஆனால், அதன் மர்மங்களை நாம் அறிய முயல்வதில்லை.
* ஆன்மிகம் எந்த ஒரு நாட்டுக்கும் உரிய தனி ஏகபோக உரிமையல்ல. எந்த இடத்திலும் அடக்கிவைக்க முடியாத காற்று போன்றது. ஆன்மிக காற்று உலகெங்கும் வீசட்டும்.
* கடவுள் கண்ணுக்கு புலப்படாவிட்டாலும் அவர் இருப்பது உறுதியானது. காரணம் படைப்பவனின்றிப் படைப்புக்கள் இல்லை. மண்ணின்றிப் பானையில்லை என்பது போல், பிரும்மத்தின் மூலப் பொருள்களின்றிப் பிரபஞ்சம் இல்லை.
- சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement