முயற்சி மிகவும் முக்கியம்
ஜனவரி 25,2011,
19:01  IST
எழுத்தின் அளவு:

* பக்தியுடையவர்கள் பழங்கதையொன்றை முணுமுணுப்பதைவிட, இஷ்டதெய்வத்தை அறிவில் நிறுத்தி அதனிடம் மிகுந்த தாகத்துடனும், உண்மையுடனும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
* கேட்டவுடனே கொடுப்பதில் தெய்வத்திற்கு விருப்பம் இல்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமதம் உண்டாகும்.
* மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனித நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
* மனிதன் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.
* ஒரு செயலைச் செய்வதற்காக, தெய்வத்தை நம்பிவிட்டு முயற்சிக்காமல் இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.
- பாரதியார்


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement