உழைத்து வாழ்வதே நோக்கம்
பிப்ரவரி 04,2011,
00:02  IST
எழுத்தின் அளவு:

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்
இப்போது கடவுளோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலும், ஒளியைப் போலும், பலரை
நல்வழிக்குக் கொணர்ந்து விண்மீன்களைப் போல ஒளி வீசித் திகழ்வர்.
* கடவுள் இரு ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை
ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் உருவாக்கினார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்.
நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்
வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* "இருளிலிருந்து ஒளித்தோன்றுக' என்று சொன்ன
கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை
வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும்
கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement