ஏப்ரல் 29,2008,
01:51  IST
எழுத்தின் அளவு:

நீங்கள் நதியைப் போன்றவராஅறியாமல் கண்ணில் விரல் பட்டுவிட்டால் அந்த விரலை தண்டித்து விடுவோமா? இல்லை. கண்ணின் வலியைப் போக்கவே முயற்சி செய்வோம். காரணம் கண்ணும், விரலும் நம் உறுப்புக்களே. அதைப்போல், அனைத்துயிர்களிலும் நாம் ஆண்டவனையே காண வேண்டும். இது சாத்தியமானால் பிறரது தவறுகளை எளிதில் நம்மால் மன்னிக்க முடியும். பிறரை நேசிப்பதும், அவர்களின் குற்றங்களை மன்னிப்பதும் ஆன்மிகத்தின் உயர்நிலைகளாகும்.பிறர்மீது அன்பு காட்டும் மனிதர், நதியைப் போன்றவர். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அன்புடைய மனிதரிடம் எல்லாரும் பழக விருப்பம் கொள்வர். அவருடன் உறவாடி இன்புறுவர். நதியில் அனைவரும் நீராடி மகிழ்வதைப் போல, அன்புடைய மனிதரும் எல்லாருக்கும் அன்பை வாரி வழங்குபவராக இருப்பார். அவரிடத்தில் அன்பு பிரவாகமாகிக் கொண்டே இருக்கும். சொர்க்கமும், நரகமும் நம் உள்ளத்தாலேயே உருவாக்கப்படுகின்றன. மனம் நிம்மதியின்றி இருக்கும் போது மகிழ்ச்சியான விஷயம் கூட நம்மை எரிச்சல் அடையச் செய்வதை அறிவோம். ஆனால், உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும் போது நம்மால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய இயலும். அதனால், புறவுலக நிகழ்ச்சிகள் நம் மனதின் போக்கிற்கேற்பவே நம்மை வழிநடத்திச் செல்கின்றன.                                                              -மாதா அமிர்தானந்தமயி

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement