உள்ளத்தில் உறுதி வேண்டும்
பிப்ரவரி 12,2011,
23:02  IST
எழுத்தின் அளவு:

* மனத்தாழ்மையுடன் மற்றவர்களை
உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
* உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி கேட்காதீர்கள்.
* பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மை ஏய்த்துக் கொள்கின்றனர்.
* உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப்
பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
* நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை. பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்
பொழிவேயாகும்.
* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.
* கடவுளுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே!
நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.
* தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளி
வேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் (இயேசு) கொடுத்த கட்டளையின் நோக்கம்.
- பைபிள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement