வீண்செலவு செய்யாதீர்கள்
பிப்ரவரி 13,2011,
00:02  IST
எழுத்தின் அளவு:

* தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவை விடச் சிறந்த உணவு
ஏதுமில்லை.
* உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால், வீண் செலவு செய்யாதீர்!
* இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்;
இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
* உங்களில் சிலருக்கு வேறு சிலரை விட உயர்ந்த
படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச்
சோதிப்பதற்காக.
* எவரிடத்தும் எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால், அவர்
சுவனம் செல்வதற்கான உறுதிமொழியை நான்
அவருக்கு அளிக்கின்றேன்.
* ஒருவருக்கு தானமாக பொருள் கிட்டினாலும், கிட்டாவிட்டாலும் கையேந்திப் பிழைப்பதை விட விறகை தன் முதுகில் சுமந்து அதனை விற்றுப் பிழைப்பதே மேல்.
* விசாலமான வீடு, நல்ல வாகனம், நல்ல அண்டை
வீட்டுக்காரர் இம்மூன்றும் நல் வாழ்விற்குத் தேவையான அம்சமாகும்.
வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement