இறைவன் தாய் போன்றவர்
டிசம்பர் 03,2007,
15:05  IST
எழுத்தின் அளவு:

இறைவனைப் பற்றி சிறிதும் அறிந்திருக்காமல், அவர் இல்லை என்று அறியாமையினால் நாத்திகம் பேசுபவர்களை வேற்று மனிதர்களைப் போல பாவிக்காமல் எல்லோரிடமும் பழகுவது போல பாரபட்சமின்றி நடந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இறைவனை விரும்பவில்லை என்ற காரணத்திற்காக நீங்கள் அவர் களை வெறுத்தால், நீங்களும் வெறுக் கத்தக்கவர்களே ஆவீர்கள். எனவே, இறைவனை நம்பாதவர்களிடமும் அன்பு செலுத்துங்கள்.

இறைவன் தூய்மையான மனங்களில் தானாகவே குடிபுகுந்து கொள்கிறான். ஆகவே, மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நிறைய அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. மனதில் தீய சிந்தனைகளை விடுத்து பக்தி உணர்வை வளர்க்கும் இறைவனின் நாமங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால் போதும். மனம் தானாக சுத்தமாகிவிடும்.

ஒரு குழந்தை நடக்கத் துவங்கும்போது கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக தாய் கைகளை பிடித்துக் கொண்டிருப்பாள். ஆனால், குழந்தைக்கோ தாய் பிடித்திருப்பதால்தான் தான் விழாமல் செல்கிறோம் என்று தெரியாது. அதைப்போலவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் போதும், இறைவன் உங்களது கையைப் பிடித்துக் கொண்டு துணை நிற்கிறார். அறியாமையினால் நீங்கள் அவரை உணராவிட்டாலும், அவர் உறுதுணையாகத்தான் இருக்கிறார். இதை புரிந்து கொண்டு அவரை உணர்ந்து கொள்ள, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement