எதை மறக்க வேண்டும்?
பிப்ரவரி 22,2011,
19:02  IST
எழுத்தின் அளவு:

* அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டப்
பழகுங்கள். ஆண்டவன் உங்களிடம் எதிர்பார்க்கும் பக்தியின் அடிப்படை இதுதான்.
* தன்னடக்கம், தன்னம்பிக்கை, தொண்டு செய்யும் பணிவு இவற்றை முதலில்
வீட்டிலும், தொடர்ந்து தெரு, ஊர்,
நாட்டிற்கும் செய்யுங்கள். படிப்படியாக
உங்கள் உள்ளம் உயர்ந்துவிடும்.
* வாழ்க்கையில் பிறருக்கு நீங்கள் செய்த உதவியையும், பிறர் உங்களுக்குச் செய்த தீங்கையும் மறந்துவிடுங்கள்.
* செடி, மரம், புழு, பூச்சி, மீன்கள் தர்மத்தை மீறுவதில்லை. விதிக்கப்பட்ட கடமையை செய்யத் தவறுவதில்லை. மனிதன் தனக்குரிய தர்மத்தை மீறுவதுடன், தீங்கு
செய்யாத உயிரினங்களையும் துன்புறுத்துகிறான்.
அத்தகையவர்கள் இறைவனைச் சிந்தித்து பண்பட வேண்டும்.
* வாய்க்கு உணவை எடுத்துச் செல்ல கைகள் வழங்கப்படவில்லை, மாறாக மலர்களால் இறைவனைப் பூஜிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளன. உணவு தேடி வாழ்வை நடத்துவதற்காக வாழ்வு வழங்கப்படவில்லை,
கடவுளைத் தேடுவதற்காகவும், பிறருக்கு உதவி
செய்யவுமே வழங்கப்பட்டுள்ளது.
- சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement