நன்மையால் தீமையை தடுப்போம்
மார்ச் 02,2011,
22:03  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.
* நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: "உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்',
* நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக. அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர் கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர். பொறுமை கொள்வோரைத் தவிர வேறு எவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
* தனிமனிதனின் (தவறான) செயலுக்காக இறைவன் அனைவரையும் தண்டிப்பதில்லை. ஆனால் தீமைகளைக் கண்டும், அதனைத்தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும், அதனைத் தடுக்காதிருந்தால் இறைவன் அனைவரையும் (தீமைகளைப் புரிந்தவர், தடுக்காதிருந்தவர்) தண்டிப்பான்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement