வலிமை பற்றி சிந்தியுங்கள்
மார்ச் 02,2011,
22:03  IST
எழுத்தின் அளவு:

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
* பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம், இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வந்துள்ளோம்.
* பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல, மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பதாகும்.
* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது, இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது தான் ஆசிரியருடைய வேலை.
* அனைத்து ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போதும் உன்னால் தியாகம் செய்ய
முடிகிறதோ, அப்போது நீ புத்தராகி விடுகிறாய்.
* உண்மை இல்லாதவற்றில் எச்சரிக்கையாக இருப்பதுடன், உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement