கனவிலும் நினைக்கக்கூடாதது
மே 14,2008,
19:27  IST
எழுத்தின் அளவு:

முதுமைக்கு வேண்டியவற்றை இளமையில் தேட வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையில் தேடவேண்டும். மரணபயம் தலைக்கு மேல் இருக்கின்றது. எந்தக்கணத்திலும் அது வரலாம். மேலே எறிந்த கல் எவ்வாறு கீழே விழுவது உறுதியோ, அதுபோல உடம்பெடுத்த நாம் மரணமடைவது உறுதி.ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். யாருக்கு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க இயலாது. அது எந்த வினாடியும் வரும். எனவே, நல்ல அறங்களை செய்து நற்கதி தேடுவதே நல்லது. செல்வம் அழியாமல் இருக்க, ஏழைகள் மனம்நொந்து கண்ணீர் விடும்படியான பாவசெயல்களை செய்தல் கூடாது. பிறருடைய பொருள் உங்களுக்கு வரவேண்டுமென்று கனவிலும் நினைக்க கூடாது. நியாயமற்ற வழியில் பொருள் தேடக்கூடாது. இந்த உடம்பு நமக்கு இறைவன் கொடுத்த வாடகை வண்டி. இதில் ஏறி, நாம் பிரயாணம் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்தை கடவுள் நமக்கு அளவிட்டுக் கொடுத்துள்ளார். அக்கால எல்லைக்குள் நாம் பிறவாநிலையாகிய முக்தியுலகை நாடிப் பிரயாணம் புரிய வேண்டும். அதற்கு ஒரே வழி யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே ஆகும். நல்ல உணவை உண்டால் உடல் வளரும். நல்ல நூல்களை படிப்பதனால் நல்லுணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் எப்போதும் இறைவனை சிந்தித்தால் உயிர் வளரும்.

Advertisement
கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement