தமிழில் ஒரு அருமையான சொல்
மார்ச் 08,2011,
19:03  IST
எழுத்தின் அளவு:

* நற்பண்புகள் கொண்ட தூய்மையான வாழ்க்கை மிகவும் முக்கியமானது, இறைப்பணியாக நமது வாழ்க்கையை மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* பஞ்ச பூதங்களாலான இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. இதன் தூய்மையை கெடுத்தால் நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடையும். மனமும் மாசடையும், இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாக மாறுவோம். இதுவே நாம் முன்னேற வழி.
* கடவுளிடம் "மன அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே நியாயமான பிரார்த்தனை.
* நாக்கின் ருசி, நாக்கின் பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்துத் தான் உங்கள் வாழ்க்கை இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் பிற பலன்கள் தாமாகவே வந்து சேரும்.
* தமிழில் "அருள்' என்று ஒரு சொல் உள்ளது. அது சமஸ்கிருதத்தில் "தர்மம்' என்ற சொல்லுக்கு இணையானது. வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு சொல் இல்லை. தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement