விதைத்ததற்கு ஏற்ற பலனுண்டு
மார்ச் 10,2011,
12:03  IST
எழுத்தின் அளவு:

* பணிபுரிய, உதவ, ஆறுதல் கூற, ஊக்குவிக்க உன் கையை நீ எப்போது தூக்குகிறாயோ, அப்போது நீ
ஆண்டவனைக் கும்பிடக் கை தூக்கியதாக அர்த்தம்.
* தவறுகளைச் செய்வதாலும், தீயோர் சேர்க்கையாலும் உடலைக் கெடுத்துக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. செய்யும் செயல் அனைத்தையும் உயர்ந்த நோக்கத்துடன் இணைத்து உங்கள் உடலைப் புனிதமானதாக மாற்றுங்கள்.
* எலுமிச்சை விதைகளை விதைத்து மாங்காய் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மாங்காய் விதைகளை விதைத்து எலுமிச்சம் பழங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு நல்ல காரியத்தைச் செய்து அதிலிருந்து கெட்ட பலனை எதிர்பார்க்க முடியாது. நீ விதைத்திருக்கும் விதையின் தரத்தினை ஒட்டியே கிடைக்கும் பலனும் இருக்கும்.
* நீ செய்யும் தீமை உன்னுடனேயே தங்குகிறது. நீ செய்யும் நன்மையோ உனக்கே திரும்பக் கிடைக்கிறது.
* செல்வம் குறைந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த குடும்பமே உயர்வானதாகக் கருதப்படுகிறது. பெரும்புகழ் அவர்களைத் தானாக வந்து சேரும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement