தப்புக்கணக்கு போடாதீர்கள்
மே 28,2008,
19:45  IST
எழுத்தின் அளவு:

*எல்லாரும் தாகத்திற்கு பருகும் நீரினைப் பாருங்கள். அயல்நாட்டார் "வாட்டர்' என்பர். வடஇந்தியர் "பானி' என்பர். தெலுங்கில் "நீலு' என்று கூறுவர். பல பெயர்களில் அழைத்தாலும் பொருள் ஒன்றே. இடம் வேறுபட்டாலும், மொழி வேறுபட்டாலும், மனிதர் வேறுபட்டாலும் பொருள் என்னவோ ஒன்றினைத் தான் குறிக்கிறது. அதேபோல பல்வேறு இடங்களில் பல பெயரிட்டு வணங்குவதும் ஒரே தெய்வத்தைத் தான்.
*புல்லாங்குழலின் உட்புறம் காலியாக இருக்கும். வெளியில் ஒன்பது துவாரங்கள். தெரியும். உடல் எனும் புல்லாங்குழலுக்கும் ஒன்பது துவாரங்கள்.உள்ளே உள்ளீடு எதுவுமில்லாததால் அது பண்ணோடு இறைவனைப் பாடப் பயன்படுகிறது. அதுபோல,நம்மிடம் உள்ள ஆசைகளை அகற்றி விட்டால் உடல் எனும் புல்லாங்குழலும் கடவுளுக்கு நெருக்கமானதாகி விடும்.
*கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தான் உண்மையானவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இரண்டும் இரண்டும் ஐந்து என்று தப்புக்கணக்கு போடுபவர்கள்.
*அடுத்தவர் குறைகளை ஆயிரம் கண்கள் கொண்டு பார்ப்பதிலேயே நேரத்தையெல்லாம் வீணாக்கினால் நம் மனம் தான் அசுத்தமாகி விடும். பொறாமை மனதில் புகுந்து விடாமல் இருக்க கவனம் வேண்டும். நம் மனம் கண்ணாடி போன்றது. அதில் தூசி படியாது தூய்மையாக இருந்தால் தான் தெளிவான காட்சி காண முடியும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement