அன்பு என்றும் அழியாதது
மார்ச் 12,2011,
01:03  IST
எழுத்தின் அளவு:

* அன்பு என்ற பண்பு பெருகிவிட்டால் சண்டைகளும், பிறர் உரிமையைப் பறித்தலும், பிறரைச் சுரண்டி வாழ்தலும் மறைந்துவிடும்.
* அன்பு மக்களைப் பிரிக்கும் உணர்வினைப் போக்கி இணைக்கிறது. அந்த இணைப்பிலே இன்பம் பிறக்கிறது.
* துன்ப நினைவுகளும், சோர்வும், பயமும் போய்விட்டால் இன்ப நிலை நமக்கு எய்திவிடுகிறது. நாம் அடைய விரும்புவதை அன்பின் வழியே பெறலாம். எனவே அன்பை விடச் சிறந்த தவம் இல்லை. அந்த அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.
* உள்ளத்திலிருந்து அச்சத்தை அகற்ற வேண்டுமானால் அன்புணர்வு நம் மனத்தில் நிறைய வேண்டும். எவர் மீது அன்பு கொண்டிருக்கிறோமோ அவரிடம் அச்சம் கொள்ள வேண்டி இராது. அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடமில்லை. கவலை, சோர்வு, அச்சம் எல்லாம் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன. அன்புணர்வு என்றும் அழியாதது.
* பார்வையற்றவரால் ஓவிய அழகை காணமுடியாது. அதே போல் சுதந்திரம் இல்லாத மனிதனால் வாழ்வில் இன்பம் பெற முடியாது.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement