இறைவனை அடைய பலவழிகள்
மே 28,2008,
19:52  IST
எழுத்தின் அளவு:

பாலபருவத்தில் மணமகன், மணமகள் பொம்மைகள் வைத்து விளையாடுவர். ஆனால், திருமணம் செய்தவர்கள் பொம்மைக் கல்யாணம் விளையாடும் குழந்தைகளை பரிகாசிக்க வேண்டியதில்லை. பொம்மைக் கல்யாணம் என்பது விக்ரக ஆராதனை போன்றது. ஈஸ்வர அனுபூதி வாய்த்தவர்கள் விக்ரக வழிபாட்டை விட்டு விடுவதில் தவறொன்று மில்லை. மாடிக்கு சென்றடைவது நமது குறிக்கோள் என்றால் அதற்கு பலவழிகள் உள்ளன. கல்லால் அமைத்த படியில் அங்கு ஏறிச் செல்லலாம். மரப்படியிலும் அதை அடைய முயற்சிக்கலாம். ஏணியிலும் ஏறலாம். மூங்கிலால் சாரம் போட்டும் மாடியை அடையலாம். அதுபோல, கடவுளும் நமக்கு எட்டாத உயரத்தில் இருந்தாலும் அவரை அடைய வழிமுறைகள் பல உள்ளன. எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் விடாமுயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது.கசிந்துருகி கடவுளை வழிபடுவது என்பது விடியற்பொழுதிற்கு நிகரானது. விடியற்காலையைத் தொடர்ந்து சூரியோதயம் உண்டாவதைப் போல, அருள்நாட்டத்தைத் தொடர்ந்து கடவுள் காட்சியைக் காணலாம். மனதை ஈசனிடம் யோகம் பண்ணுவதுதான் குறிக்கோள். எக்காரணத்தை முன்னிட்டும் ஈஸ்வர சிந்தனை மனதை விட்டு அகன்று போய்விடலாகாது. சிவலிங்கத்தின் மீது கட்டியிருக்கும் ஜலதாரை போன்று மனம் இடைவிடாது ஈசனிடத்திலேயே போய்க் கொண்டிருக்க வேண்டும்

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement