நீங்கள் ஒரு திறமையாளரா?
மே 28,2008,
19:55  IST
எழுத்தின் அளவு:

* கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை நினைத்து மனம் கலங்காதீர்கள். அது நம்மை விட்டு சென்றுவிட்ட ஒன்று. அதை நினைத்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.
* நாம் மட்டும் சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில் அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்.
* உங்களுக்கு ஒரு திறமையோ, செல்வமோ அல்லது எந்த சிறப்புத்தன்மை இருந்தாலும், அந்த ஆற்றல்வளத்தை பிறர் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை நமக்கு அதை வழங்கி இருக்கிறது.
* ஒரு மனிதன் அன்றாடம் தன் கடமையாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்
களுக்கும் நன்மையைத் தரும். இதனால் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.கடமையைச் செய்வதில் தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும்.
* ஒருவன் தன் கடமைகளை அக்கறையுடன் செய்யும் போது அற்ப நினைவுகள் அவனை தீண்டுவதில்லை. எந்த வேலையும் செய்யாமல் மனிதன் உட்கார்ந்திருந்தால் பலவகையான பயனற்ற எண்ணங்களும், தீய பண்புகளும் அவன் மனதில் புகுந்து விடும்.

Advertisement
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement