மறந்தும் கேடு செய்யாதீர்கள்
மே 31,2008,
17:14  IST
எழுத்தின் அளவு:

பிறரை ஏமாற்றி பொருள் சேர்ப்பதற்காக மட்டுமே அறிவைப் பயன்படுத்தக் கூடாது. நமக்கெல்லாம் மேலான தெய்வம் என்று ஒன்று உலகில் இருக்கிறது என்றுணரவே, அது நமக்குப் பயன்பட வேண்டும்.
தலையில் நீர்க்குடத்தை வைத்திருக் கும் பெண் வேடிக்கையாக பேசிக் கொண் டே வந்தாலும் பானை மீது கவனம் கொண்டு பாதையில் நடந்து வருவாள். அதைப் போலவே, நாமும் உலக நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தாலும் ஆன்மிக விஷயத்தில் நம் கவனத்தை பதித்திட வேண்டும். மனிதன் மறந்தும் பிறருக்கு கேடு செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு தீங்கு நினைப்பவன் தனக்கே தீங்கினைத் தேடிக் கொண்டவன் ஆவான். நாய் நன்றியுள்ள பிராணி. நாயைத் தடியால் அடித்தால் அது கடிக்கத் தானே செய்யும். ஆனால், அன்போடு அரவணைத்து, உணவிட்டால் உன்னைச் சுற்றி வரும். பாதுகாப்பாக வீட்டைக் காக்கும்.
சாம்பார் தயாரிக்க காய், பருப்பு, புளி, மிளகாய் என எல்லாம் இருக்கலாம். ஆனால் சமைக்கும் பாத்திரம் சுத்தமில்லாமல் இருந்தால் சாம்பார் கெட்டுவிடும். அதுபோல், ஜபம், பூஜை, பஜன் என்று எல்லாம் இருந்தும் மனம் தீய சிந்தையுடன் இருந்தால் ஒரு நன்மையும் இல்லை. உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் ஏதோ ஒரு பயன்பாட்டுக்காகவே இருக்கின்றன. பயனற்ற பொருள் என்று ஒன்றை கடவுள் படைப்பதில்லை.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement