நிரந்தர வீட்டை வாங்குவோம்
மே 31,2008,
17:27  IST
எழுத்தின் அளவு:

நம் பெற்றோர் நம்மை "" என் குழந்தைகள்'' என்று கூறி மகிழ்ச்சியடைவர். நாம் உண்மையில் யாருடைய குழந்தை என்று எண்ணிப் பார்த்ததுண்டா? நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள். பெற்றோர்கள் நம் பிறப்புக்கு காரணமானவர்கள் மட்டுமே. கடவுளே நம் உண்மையான தாயும் தந்தையுமாவார்.பிரயாணம் செய்யும் போது, உடன் வருபவர்கள் நம் உறவினர் போலவும், நண்பர்கள் போலவும் பழகுவதுண்டு. ஆனால், அவரவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டால் இறங்கிச் சென்று விடுவர். அதுபோல தான் உலக வாழ்வில் நம் உறவினர்களும். நமக்கென்று இருக்கின்ற நிரந்தர உறவினன் இறைவன் ஒருவனே. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாலும் மனம் குளிர்ச்சியாக இல்லாவிட்டால் அந்த இனிய சூழலை நம்மால் ரசிக்க இயலாது. மனஅமைதியில்லாவிட்டால் புறச்சூழ்நிலைகளால் எந்தப்பயனும் இல்லை. உண்மையில் மனதையே ஒருவன் குளுமைப்படுத்த வேண்டும். மனம் அமைதியாக இருந்தால், எந்த வித சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டாகும் நாம் வசிக்கும் இந்த உடல் வாடகை வீடு. மரணம் வந்து இதைக் காலி செய்யுமாறு கூறும் போது நாம் மறுக்க முடியாது. மரணம் என்றாவது ஒரு நாள் வந்தே தீரும். அதற்குள் ஆன்மிக சாதனைகளால் அருட்செல்வத்தைச் சேர்த்து நமக்குரிய நிரந்தர வீட்டை வாங்க வேண்டும்.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement