சோதனைகள் சாதிப்பதற்கே!
மே 31,2008,
17:40  IST
எழுத்தின் அளவு:

தலையிலுள்ள முடியானாலும், நடக்க உதவும் காலானாலும் உடலில் எல்லாமே முக்கியம் தான். ஒவ்வொரு உறுப்பும் அதன் பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும். அந்தந்த பொறுப்பை அந்தந்த உறுப்புக்கள் நிறைவேற்றினால் தான் உடம்பு சீராக இயங்கும். இதேபோல, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்காமல் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்தால்தான் நம் வாழ்க்கை நன்கு இயங்க முடியும்.
வகுப்பில் ஆசிரியர் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடம் நடத்துகிறார். ஆனால், தேர்வில் எழுதும் விதமும், கிடைக்கும் மார்க்கும் ஒருவருக்கொருவர் வேறுபடும். யார் சிறந்த மாணவர் என்பதைத் தேர்ந்தெடுக்க நிச்சயமாய் தேர்வு தேவைப்படுகிறது. அதேபோல, நம் பண்புகள் வெளிப்பட ஆண்டவன் வைக்கும் சோதனை மிக அவசியம். அதை ஒரு சாதனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேதனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
என்னால் எதுவும் முடியும் என்று தலைக்கனத்துடன் இருக்கும் வரை ஆண்டவனின் கருணை நமக்கு கிடைப்பதில்லை. "எல்லாம் நீ தான்! என்னிடத்தில் எதுவும் இல்லை' என்று கடவுளைச் சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.
நாம் வாழ்வில் பெறும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். ஆசைகளுக்கு ஒரு வரம்பை வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement