கோபம் பஞ்சாய் பறக்க வழி
மார்ச் 27,2011,
14:03  IST
எழுத்தின் அளவு:

* செல்வம் குறைந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வாக கருதப்படுகின்றன. பெரும்புகழ் அவர்களைத் தானாக வந்து சேரும், ஏனெனில் செல்வம் நிலையற்றது. ஒழுக்கம் நிலையானது. பணம் இல்லாதவனுக்கு குறைகள் ஏதும் கிடையாது.
* தவறுகளைச் செய்வதாலும், தீயவர்களின் சேர்க்கையாலும் உடலைக் கெடுத்துக் கொள்வது வருந்தத்தக்கது. செய்யும் செயல் அனைத்தையும் உயர்ந்த நோக்கத்துடன் இணைத்து உங்கள் உடலைப் புனிதமானதாக மாற்றுங்கள்.
* மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறேர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
* ரயில் தவறிவிட்டது என்கிறோம், ஆனால், நாம் தான் ரயிலுக்குத் தக்க நேரத்தில் சென்று அடையாமல் தவறிவிட்டோம். அதேபோல் நாம் செய்த வினைகளே நம்மை சோதிக்கின்றனவே தவிர, இறைவன் சோதிப்பதில்லை.
* அளவுக்கு அதிகமாக கோபம் வந்தால், இறைவனின் திருப்பெயர்களை இடைவிடாது கூறினால், கோபம் ஆடிக்காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல் பறக்கும்.

- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement