குத்திப்பேசுவது ஆகாத செயல்
மார்ச் 27,2011,
14:03  IST
எழுத்தின் அளவு:

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான்.
* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!
* உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.
* இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் பட்டப்பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்.
* இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement