கருணை மிக்க இறைவன்
ஏப்ரல் 05,2011,
01:04  IST
எழுத்தின் அளவு:

* உங்களின் இறைவன் கருணை பொழிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறை செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.
* இறைவன் தான், தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிக் கொண்டிருக்கின்றான். உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், இறைவன் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.
* (நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்''.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement