மனதிற்குள் அணை கட்டுங்கள்
ஜூன் 12,2008,
11:14  IST
எழுத்தின் அளவு:

உலகத்தின் தாய், தந்தையரே கடவுள். நம் உடலின் தாய்தந்தையே நம் பெற்றோர், இவ்வுடலைத் தந்த பெற்றோருக்கு நன்றி காட்டும் போது<, உலகை நமக்கு அளித்த கட வுளுக்கும், நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
வீணை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் இசைக்கலைஞனாகி விடமுடியாது. அதுபோல, இதயம் கொண்ட அனைவரையும் மனிதன் என்று சொல்ல இயலாது. இதயம் என்பது கடவுளாகிய அருளின் இருப்பிடம் என்ற சிந்தனையும் உள்ளவனே நிஜமான மனிதன். ஆறு தறிகெட்டுப் பாயும் போது, அணைகட்டி, பயனுடையதாக சேமித்து பலவழிகளில் பயன்பெறுகிறோம். அதேபோல, நமது சிந்தனைகள் கட்டுப்பாடின்றி எங்கெங்கோ செல்லுகின்றன. "கட்டுப்பாடு' என்ற அணைகட்டி அதன் போக்கை முறைப்படுத்த வேண்டும். அதனால் பயனுள்ள பல நல்ல செயல்களைச் செய்ய முடியும். ஒரு திருமணத்திற்கு போக விரும்பாவிட்டால் நிகழ்ச்சிக்கு செல்வதை ரத்து செய்துவிடலாம். சினிமாவுக்கு செல்ல வாய்ப்பில்லாவிட்டால் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு விடலாம். ஆனால், இறுதிப்பயணமான மரணத்தை யாராலும் ஒத்தி போட முடியாது. மரணம் நம்மை எப்போது வேண்டுமானாலும் வந்து நெருங்கலாம். அதற்குள் நீங்கள் செய்ய நினைக்கும் நல்ல செயல்களை செய்ய ஆர்வம் கொள்ளுங்கள்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement