நல்லதை உடனே செய்துவிடு
ஏப்ரல் 10,2011,
14:04  IST
எழுத்தின் அளவு:

* இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்து போனால், அவர்களுக்கு உதவி செய். அவர்கள் அன்னியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.
* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
* தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதே செய்துவிடு.
* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன். தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்பொழுதும் புகழ்ந்து போற்றுவேன்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement