பெயர் சொல்லும் பாடம்
ஜூன் 12,2008,
11:24  IST
எழுத்தின் அளவு:

குழந்தைக்குப் பெயர் வைப்பது என்பது இல்லற வாழ்வில் முக்கியமானதாகும். குழந்தையை இறைவன் தந்த பிரசாதமாகவே நாம் கருத வேண்டும். அதனால், குழந்தையை அழைக்கும் போதெல்லாம் கடவுளின் நினைவு வரும்படியாக இறைநாமங்களை வைப்பதே முறையாகும். அது நம்முடைய நன்றி உணர்வைக்காட்டுவதாக அமையும். பாண்டுரங்கன், வெங்கடேசன், தியாகராஜன் என்று எவ்வளவோ இறைநாமங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்படி நல்ல பெயராக வைத்து விட்டு, பாண்டு, வெங்கு, தியாகு என்று அழைப்பதால் பயனில்லை. இன்னும் சிலர் "எஸ்.என்.,' "ஆர்.டி.<,' என்று இன்ஷியல் மட்டுமே வைத்தும் அழைக்கின்றனர். பெயரை இப்படி சுருக்கி அழைப்பதற்காகவா இறைநாமங்களை பெயராக வைத்தது? இல்லவே இல்லை. கூடிய வரையில் பெயரை முழுமையாக அழைப்பதே நல்லது.
ராமன் என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தந்தை, தாய் சொல்லை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சீதா என்றால் கணவன் அன்பிற்கு இணங்கி காடு செல்லவும் ஆயத்தமாக இருக்க வேண்டும். லட்சுமணன் என்று பெயர் கொண்டவர் அண்ணனுடன் சண்டை போடுபவராக இருந்தால் அப்பெயரை வைக்காமலே இருக்கலாம். அதாவது நல்ல பெயர்களை வைத்துக் கொள்வதோடு அப்பெயருக்குரிய நல்ல பண்புகளையும் ஒட்டியதாக நம் வாழ்க்கை முறை இருக்க வேண்டும்

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement